• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அதிமுகவினர் போலி பேப்பரை கொடுத்து செக்கென ஏமாற்றுகிறார்கள் ஐபிஎஸ் குற்றச்சாட்டு..,

ByS.Ariyanayagam

Apr 19, 2026

அதிமுகவினர் போலி பேப்பரை கொடுத்து செக்கென ஏமாற்றுகிறார்கள், மக்கள் நம்ப வேண்டாம் என திமுக வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமார் பேசினார்.

திண்டுக்கல் 6வது வார்டு சுசீலா மருத்துவமனை, பழைய மேற்கு காவல் நிலையம், எஸ். கே. சி. திருமண மண்டபம், மருதாணி குளம், ஆர்.எம்.காலனி பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்து பேசியதாவது:
அதிமுகவினர் வெறும் பேப்பரை கொடுத்து செக் என சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் ஒருபோது ஏமாறக்கூடாது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.

மருதாணி குளம் பகுதிக்கு பட்டா கிடைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் ஏற்பாடு செய்வார். 30 ஆண்டுகளாக நீர்நிலைகள் இல்லாத பகுதிகள் என்பதை கோட் மூலம் நம் விளக்கி நாம் பட்டா பெற வேண்டும். தற்போதுள்ள எம்எல்ஏ அலுவலகத்திற்கு எத்தனை பேர் சென்று இருக்கிறீர்கள். எப்போதாவது அவர் அலுவலகத்தை திறந்து மக்கள் பிரச்சினைகளை கேட்டிருக்கிறாரா. அப்படி அவரை சந்தித்து பிரச்சினைகளை கூறியவர்கள் இருக்கிறீர்களா.

இனி அந்தப் பிரச்சினை உங்களுக்கு ஏற்படாது. எனது அலுவலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். திண்டுக்கல் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். முதல்வர் பெண்கள் கல்வி பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெண்களுக்கு உரிமை தொகை ரூ.2000 வழங்கப்படும். அவர்கள் கற்பதற்கு லேப்டாப் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்படும்.

மக்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்த உள்ளார். கூப்பன் ரூ.8000 உங்களுக்கு ஆட்சி பொறுப்பேற்றவுடன் வழங்க வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாநகர் மாவட்ட தலைவர் மணிகண்டன் உட்பட கூட்டணி கட்சியினர் பல்வேறு இடங்களில் வரவேற்பு கொடுத்தனர்.