

ஒரு புது வகை கையுறையை வடிவமைத்துள்ளனர் பார்ட்லெட் மற்றும் குழுவினர். இந்தக் கையுறையில் ஒவ்வொரு விரல் நுனியிலும் உறிஞ்சக்கூடிய சக்கர் எனும் அமைப்பு உள்ளது. ஆக்டோபஸ் கைகளிலுள்ள அமைப்பிலிருந்து இந்த வடிவத்திற்கான சிந்தனை தோன்றியதாம்.
இந்த உறிஞ்சும் அமைப்பு. ராஸ்பெரி பழ அளவிலான ரப்பர் கூம்பு போன்றது.அதன் மேல் விரிந்துகொடுக்கும் ரப்பர் பரப்பு உள்ளது. இதனுள்ளிருக்கும் காற்றை வெளியேற்றும்போது நுனிப்பகுதி ஒரு கிண்ணம் போல் வளைந்து வெளித் தளங்கள் மேல் ஒட்டிக் கொள்கிறது.மீண்டும் காற்றை உள் செலுத்தும்போது நுனிப்பகுதி விரிந்து ஒட்டிக்கொண்டிருக்கும் பரப்பிலிருந்து விலகிக்கொள்கிறது.கையுறையின் விரல்களில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவை ஒரு ஒரு பரப்பின் அருகில் வரும்போது ஒட்டும் முறைக்கு மாறும் வகையில் சுவிட்சை இயக்குகின்றன. இந்த ஆய்வாளர்கள் தண்ணீருக்கு அடியில் உள்ள பொருட்களை எடுக்க இவற்றைப் பயன்படுத்தி சோதனை செய்துள்ளார்கள்.ஒவ்வொரு உறிஞ்சும் அமைப்பும் வெளியில் ஒரு கிலோ எடையுள்ள பொருட்களையும் தண்ணீருக்கு அடியில் அதைவிட கூடுதல் எடைப் பொருட்களையும் எடுக்க முடியும்.
ஆக்டோபஸ்கள் தங்களுடைய எட்டு கைகளிலுமுள்ள ஆயிரக்கணக்கான சக்கர்களை இயக்க முடியும்.இதன் மூலம் கடலின் அடிப்பரப்பை ஆய்ந்து தங்கள் இரைகளை பிடிக்கின்றன.அதற்கு தொடு உணர்விகள் மட்டுமல்ல அதிலுள்ள வேதிப்பொருட்கள் மூலம் தங்கள் சுற்றுப்புறத்தை ‘ருசி’ பார்க்கின்றன. ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ள கையுறையில் இந்த அம்சம் இல்லை.ஆனால் அதையும் சேர்க்க முடியுமா என்கிற வாய்ப்பையும் சிந்திக்கிறார்களாம்.அதன் மூலம் குறிப்பிட்ட பொருட்களில் மட்டும் ஒட்டிக்கொள்ள இயலும்.
