திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்தாணு அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில் மற்றொரு திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.இன்று காலை முதல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை,சென்னையில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் தற்போது தி.நகரில் உள்ள கலைப்புலி எஸ்.தாணு அலுவலகத்திலும் ஐ.டி ரெய்டு நடந்து வருகிறது. இது தவிர 10க்கும் மேற்பட்ட சினிமா பைனான்சியர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்து வருகிறது.