தமிழகத்தில் இனி செறிவூட்டப்பட்ட பர்பிள் நிறம் கொண்ட ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி செரிவூட்டப்பட்ட புதிய பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு செரிவூட்டப்பட்ட பசும்பால் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் கண்பார்வையை அதிகரிப்பதிலும் செரிவூட்டப்பட்ட பால் பங்கு வகிக்கும் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. செரிவூட்டப்பட்ட பால் பர்பிள் நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.