டி. கே. சிதம்பரநாத முதலியார் நினைவு தினம் இன்று..!
ரசிகமணி டி.கே.சி. எனஅனைவராலும் அறியப்படுபவர் டி. கே. சிதம்பரநாத முதலியார். இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர் மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி. தென்காசியில் ஆரம்ப கல்வியும் திருச்சிராப்பள்ளி உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியும் பயின்றார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். 1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையத்துறை பாதுகாப்பு ஆணையராக பணியாற்றினார். 1927 ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாநில முதல்வராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரைச் சின்னமாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை பரிந்துரை செய்தார். இவரது வீட்டின் நடு முற்றமாக இருந்த வட்ட வடிவமான அமைப்பில் இவரது நண்பர்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூடுவார்கள். இந்தக் கூட்டத்திற்குத் தான் வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது. இவரின் வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் மீ. ப. சோமு, பி. ஸ்ரீநிவாச்சாரி, கல்கி, ரா. பி. சேதுப்பிள்ளை, இராசகோபாலாச்சாரி, அ. சீனிவாச ராகவன், தொ. மு. பாஸ்கர தொண்டைமான், ச. வையாபுரிப்பிள்ளை, வெ. ப. சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.இந்த இலக்கிய மன்னன் டி. கே. சிதம்பரநாத முதலியார் நினைவு தினம் இன்று..!