ஒரு இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர் மற்றும் வானியலாளர் என பல முகங்கள் கொண்டவர் எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை. சென்னை மாகாணத்தில் ஒரு ஏழை கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் பள்ளிக்கல்வி முடித்தனர் சட்டப் படிப்பினை முடித்தார். 1920-25 காலகட்டத்தில் சென்னை மாகாண அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றினார். 1924ல் சென்னை மாகாண சட்டமன்றத்தின் அவைத்தலைவராக இருந்த பெருங்காவலூர் ராஜகோபாலச்சாரி பதவி விலகியதால், அவைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நீதிக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட சாமிக்கண்ணு வெற்றிபெற்று அவைத்தலைவரானார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அவைத்தலைவர் இவரே. அவைத்தலைவராக இருந்த போது சட்டமன்ற நூலகத்தை உருவாக்கினார். பதவியில் இருக்கும் போதே காலமானார். திவான் பகதூர் பட்டம் பெற்ற இவர், 1924ல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு அமைப்புப் பட்டியலில் (Order of the Indian Empire) இடம் பெற்றார். இவர் எழுதிய சில நூல்கள் Panchang and Horoscope, An Indian ephemeris, Indian Chronology. பல துறைகளில் சிறந்து விளங்கிய எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை பிறந்த தினம் இன்று…!