• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேட்டி..,

BySeenu

Jul 2, 2026

இடதுசாரி கட்சிகள் தேர்தல் முடிவை மதித்து வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருவதாகவும், ஆனால் தேர்தல் முடிவை ஏற்க முடியாத திமுக, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் குதிரைப் பேரம் கழுதை பேரம் போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார்.

சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று கூறியதன் பின்னணி தற்போது புரிவதாகவும், எம்.எல்.ஏ.க்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் அதையே சுட்டிக்காட்டுவதாகவும் குற்றம் சாட்டிய அவர்

விருப்பத்தின் பேரில் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது வேறு, பணம் கொடுத்து பேரம் பேசி கட்சி மாற வைப்பது வேறு என்றும், இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

டெல்லி பிரதிநிதியை நியமிப்பது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்றும், இடதுசாரி கட்சிகள் எந்த அரசியல் அணியிலும் இல்லாமல் தனித்து செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் அணு கனிமச் சுரங்கத் திட்டத்திற்கான அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பார்ட்டி பண்ட் விவகாரம் குறித்து திமுக கூட்டணியில் இருந்த போது தெரியாது என்றும் தற்போது பல்வேறு துறைகளில் பார்ட்டி பண்ட் விவகாரம் வெளியாவதை நிரூபிக்க் வேண்டும் என தெரிவித்த அவர் அந்த குற்றசாட்டுகள் குறித்து எவ்வித அதிர்ச்சியும் இல்லை வருத்தமும் இல்லை என்று தெரிவித்தார்.