• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பு..!

BySeenu

Jul 2, 2026

கோவை விமான நிலையத்தில் இன்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது ;

நாங்கள் கடிதத்தில் தெளிவாக கூறி உள்ளோம். உழைத்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்து உழைத்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக உழைத்தவர்கள் அனைவருக்கும் பதவி வழங்கப்படவில்லை. 
எனவே நான் அன்பழகன் தங்கமணி உள்ளிட்டவர்கள் எங்களுக்கு கொடுத்த பதவி வேண்டாம் நாங்கள் உறுப்பினராக தொடர்வோம் என்று கூறி உள்ளோம். ஆனால் நாங்கள் தெளிவாக கூறி இருந்தும் நீங்களாக ஏதாவது கூறிக் கொண்டு இருக்கிறீர்கள். 

கூட்டத்திற்கு எப்போதும் வளர்மதி அழைப்பார் இந்த முறை எங்களுக்கு தகவல் இல்லை. அதற்கு முன்பு நாங்கள் கடிதம் கொடுத்து விட்டதால் எங்களை அந்த கூட்டத்திற்கு அழைக்காமல் இருந்து இருக்கலாம். 

நான் சொன்ன ஜாம்பவான்கள் என்று அர்த்தம் வேறு நீங்கள் முழுமையாக படாமல் உள்ளீர்கள். கட்சிக்காக உழைத்தவர்கள் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர கட்சியை வளர்த்தவர்கள் 4 நாலாம் தேதி பதவி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். 

நாங்கள் தெளிவாக கடிதத்திற்கு கூறி உள்ளோம். அ.தி.மு.க நன்றாக இருக்க வேண்டும். கட்சி நன்றாக இருக்க வேண்டும் எனவே பொதுச் செயலாளர் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். 
இவ்வாறு கூறினார்.