• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தீவிர சிகிச்சை பிரிவில்சோனியா காந்தி

ByA.Tamilselvan

Jun 17, 2022

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியாகாந்தி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சோனியா காந்திக்கு குறைந்த சுவாசக் குழாய் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சோனியா காந்தி தொடர்ந்து மருத்துவரின் தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதை் தொடர்ந்து மூக்கில் இருந்து ரத்தம் கசிந்தது. இதனால் கடந்த 12-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவரது சுவாசக் குழாயில் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தற்போது கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.