நடுவானில் ஷாப்பிங் செய்வதற்கான ஸ்கைமால் என்ற திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
36 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து வானில் பறந்து கொண்டே ஷாப்பிங் செய்வதற்கான திட்டத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ஸ்கை மால் (Sky Mall) என பெயர் சூட்டியுள்ளது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம். இதன்படி ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பறந்து கொண்டே பயணிகள் மிக எளிதாக ஷாப்பிங் செய்யலாம். இதற்காக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஸ்நாப்டீல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
விமானங்களில் ஸ்னாப்டீல் நிறுவனங்களின் ஆடைகள், நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எல்லா உள்நாட்டு விமானங்களிலும் பயணிகள் ஆடைகள், மொபைல் உபகரணங்கள் ஆகியவற்றை ஆர்டர் செய்யலாம். விமானம் தரையிறங்கும் போது ஆர்டர் உறுதி செய்யப்படும். ஆர்டர் செய்யப்பட்ட பொருள்கள் இந்தியா முழுவதும் வீடுகே நேரடியாக டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், ஸ்னாப்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.