

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல், செங்கமல நாச்சியார்புரம், விஸ்வநத்தம் ஆகிய பகுதியில் கோலப் பொடி உற்பத்தி நடைபெற்று வருகிறது. வரும் பங்குனி பொங்கல், சித்திரை பொங்கல் நடைபெற உள்ளதால் பல்வேறு கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும். அதற்கு தேவையான கோலப்பொடி ஆர்டர்கள் கிடைத்துள்ளதால் கோலப்பொடி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் சிவப்பு , ஆரஞ்சு, மஞ்சள் ,ஊதா உள்ளிட்ட வண்ணங்களில் கலர் பொடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.



