

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி தெற்கு தெருவில் உள்ளது. கழுவுடையம்மன் கோவில் திருக்கோவிலில் மாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளில் கரகம் எடுத்தல், பின்னர் காப்பு அணிந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதியின் வழியாக வலம் வந்து கழுவுடை அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
மாலை முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இரண்டாம் நாளில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கழுவுடையம்மன் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


