

மாநில அளவிலான வளரி போட்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மருதுவளரி விளையாட்டு சங்கம் சார்பில், லிஸ்டியோ நினைவு கோப்பை 5வது மாநில அளவிலான வளரி போட்டி நடைபெற்றது. சிவகாசி நாடார் மஹாஜன சங்கத்தின் மாநகர தலைவர் கண்ணன் போட்டியினை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

