இந்தியாவில் முதல்முதலா சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜூலை 27ல் துவங்கும் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஜூலை 10ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை அருகே மாமல்ல புரத்தில் நடைபெறவிருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகளை பார்வை யிட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி போர் பாயிண்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் ஜூலை 27 ஆம் தேதி முதல்ஆக. 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 150 வெளிநாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள்பங் கேற்க உள்ளனர். இதனால், மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையோரம் கடற்கரையை ஒட்டி அமைந் துள்ள நட்சத்திர விடுதிகளில் வீரர்கள் தங்கும்வகையில் அனைத்து விதமானஅடிப்படை வசதிகளும் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
இதில், விடுதிகளில் வீரர்கள் தங்குவது, அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது, சர்வதேச அளவில் உட்கட்ட மைப்பு வசதிகளை மேற்கொள் வது தொடர்பாக, பல்வேறு குழுவினர் மற்றும் அமைச்சர் கள் ஆய்வு மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். இதில், போட்டி நடைபெற உள்ள சொகுசு விடுதி மற்றும் மாற்று ஏற்பாடாக அமைக்கப் பட உள்ள மற்றொரு விளையாட்டு திடல் ஆகிய பகுதி களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சி யில், இந்திய சதுரங்க கூட்ட மைப்பு செயலாளர் மற்றும் ஒலிம்பியாட் இயக்குநர் பரத்சிங் சவுகான், செயற்குழு உறுப்பினர் சங்கர், விளையாட்டுத் துறை செயலாளர் அபூர்வா, குழு கமிட்டி தலைவர் ஆனந்த் குமார், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், எஸ்.பி.சுகுணா சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர், “சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால், அதற்கான அனைத்து ஏற்பாடு களையும் ஜூலை 10 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள் ளோம்” என்றார். இந்தப் போட்டிக்காக 42 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கூடுதலாக ஒரு களம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.