• Fri. Mar 31st, 2023

உலக பணக்காரர்கள் பட்டியலில் இணைந்த இந்தியர்!…

Byமதி

Oct 10, 2021

சர்வதேச அளவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து சேர்த்தவர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த பட்டியலில் எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். 

இந்நிலையில், 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து சேர்த்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார். 

64 வயதான முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் அமெரிக்கா டாலர்கள், அதாவது 7 லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என புளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *