• Sun. Mar 26th, 2023

இந்தியாவே அதிர்ச்சி… பாராலிம்பிக்கில் பறிபோனது பதக்கம்!

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வினோத் குமார் வென்ற பதக்கம் திரும்பப் பெறப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி, டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வட்டு எறிதல் போட்டியில் பங்கேற்ற 41 வயதான இந்திய வீரர் வினோத் குமார். F52 பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். தசைபலம் தளர்வு, கை, கால்களில் குறைபாடு மற்றும் முதுகு தண்டுவட பாதிப்பு உள்ளோர் பங்கேற்ற இந்த போட்டியில் 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப்பதக்கத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது தொழில்நுட்பக் குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் வினோத்குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டது. வட்டு எறிதல் எஃப் 52 பிரிவில் பங்கேற்க வினோத்குமார் தகுதியற்றவர் என தொழில்நுட்பக்குழு அறிவித்தது. எனவே வினோத் குமார் வென்ற வெண்கல பதக்கத்தை ஒலிம்பிக் குழு திரும்ப பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *