இன்றைய தினம் ( 04.03.2025) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை நிர்வாக அதிகாரி . அலோக் சிங் டெல்லியில் உள்ள அவரது தலைமை அலுவலகம் (குருகிராம்) பகுதியில் சந்தித்தோம்.இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. இதில் மதுரை – சிங்கப்பூர் விமான சேவையை ரத்து செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்பதையும், மேலும் மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கும், கோலாலம்பூர் போன்ற பிற முக்கிய நாடுகளுக்கு விமான சேவைகள் வழங்கும் வாய்ப்புகள் பற்றியும் விரிவாக விவாதித்தேன்.

இந்த சந்திப்பின் போது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் மதுரை-சிங்கப்பூர் சேவையை ரத்து செய்யும் முக்கிய காரணமாக, மூன்று மாதங்களை தவிர மற்ற ஒன்பது மாதங்களில் மதுரை விமான நிலையத்திலிருந்து வெறும் 50% முதல் 60% பயணிகளே பயணிக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டனர்.
இதனால் வர்த்தக ரீதியாக இச்சேவையை தொடர்ந்து இயக்குவது சிரமமாக இருப்பதாக தெரிவித்தனர். எனினும், வரும் குளிர்கால கூட்டத் தொடர் (Winter Schedule) குறித்து மறுபரிசீலனை செய்யவும், மேலும் விரிவாக ஆய்வு செய்யவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் மதுரை விமான நிலையத்திலிருந்து பயணிகளை அதிகரிக்க தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். மதுரை-சிங்கப்பூர் விமான சேவை நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்த சந்திப்பில் மதுரை டிராவல்ஸ் கிளப் சார்பாக திரு. முஸ்தபா, டிராவல்ஸ் கிளப் தலைவர் திரு. ரவீந்திரன், ட்ராவல் கிளப் திரு. ராஜா மற்றும் மதுரை விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் திரு. காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை விமான நிலையத்திற்கு 24 மணி நேர சேவை வழங்குவதற்காக 2010ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக போராடி பல வெற்றிகளை பெற்றுள்ளோம்.
ஆனால், மதுரை – சிங்கப்பூர் விமான சேவை நிறுத்தப்படுவது மிகுந்த வருத்தத்தை தரும் செய்தியாக உள்ளது. மதுரை விமான சேவைகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.




