குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அருணாச்ச பிரதேசம் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருந்தது. சீனாவின் ஆட்சேபத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில் பீரங்கிகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள மலைகளில் எல் 70 ரக அதிநவீன விமான எதிர்ப்பு சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது.

சீனாவும் எல்லையில் தனது படைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் ராணுவத்தினரை பயிற்சியிலும் ஈடுபடுத்தி வருகிறது.
ஏற்கனவே எம் 777 ரக சிறு ஏவுகணைகள், போஃபோர்ஸ் பீரங்கிகளை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில் அவற்றுடன் தற்போது எல் 70 ஏவுகணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லையில் படைகளின் தயார் நிலை குறித்து ராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக எல்லையில் படை பலம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.