• Tue. Apr 16th, 2024

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6, பிக்சல் 6 புரோ…

Byமதி

Oct 21, 2021

கூகுள் நிறுவனம் தன்னுடைய பிக்சல் ஸ்மார்ட்போனின் 6-வது தொடரை அறிமுகம் செய்துள்ளது. உள் டென்சர் சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 புரோ அதி நவீன புதிய அம்சங்கள் மற்றும் ஏஐ (AI) திறன்களையும் கொண்டுள்ளது. மேலும் மிகச்சிறந்த கேமராவை கொடுத்திருப்பதாக கூகுள் குறிப்பிட்டுள்ளது.

ஆரம்ப கட்டமாக பிக்சல் 6 தொடர் 8, அக்டோபர் 28 ந்தேதி முதல் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தைவான், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா ஆகிய 8 இடங்களில் பிக்சல் 6 தொடர் விற்பனைக்கு வருகிறது. கூகுள் கடந்த 3 பிக்சல் ஸ்மார்ட்போன் மாடல்களையும் இந்தியாவில் விற்பனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் ஏறக்குறைய ரூ. 45,000க்கும், பிக்சல் 6 புரோ ஸ்மார்ட்போன் ஏறக்குறைய ரூ. 67,500க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *