• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பின்னடைவைச் சந்திக்கும் இண்டியா கூட்டணி

Byவிஷா

Feb 15, 2024

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணியில் ஏற்கெனவே இருவர் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக்அப்துல்லா தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால், இண்டியா கூட்டணி மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தொகுதி பங்கீடும் தள்ளிப்போவதால் தனியாகப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மம்தா. கெஜ்ரிவால் தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்த நிலையில், இண்டியா கூட்டணிக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இண்டியா கூட்டணியிலிருந்து வெளியேறிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் என்டிஏவில் இணைந்திருப்பது உள்ளிட்ட நிகழ்வுகள் இண்டியா கூட்டணிக்கு விழுந்திருக்கும் பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஃபரூக் அப்துல்லாவின் அறிவிப்பும், இண்டியா கூட்டணியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.