• Thu. Apr 25th, 2024

சூரியனில் அதிகரிக்கும் கரும்புள்ளிகள்.. காந்த புயல் எச்சரிக்கை

Byகாயத்ரி

Mar 31, 2022

சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரிக்க துவங்கி இருப்பதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் நிலையில், வரும் நாட்களில் இதன் வீரியம் உயர்ந்து சூரியகாந்த புயலாக மாறி பூமிக்கு வர வாய்ப்புள்ளதாக வானியற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தார்.

அவர் கூறியிருப்பதாவது, “11 வருடங்களுக்கு ஒரு முறை சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும். இது தொடர்பாக நாசாவிஞ்ஞானிகள், நடப்பு ஆண்டில் அதிகமாக காந்தபுயல் வீசக்கூடும் என்பதால், விண்வெளியில் சேட்டிலைட், அலைபேசி அலைவரிசை பாதிக்கலாம் என எச்சரித்தனர். அதனை தொடர்ந்து கொடைக்கானல் வானியற்பியல் மையத்தில் சூரியனை 4 தொலை நோக்கிகள் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர். கடந்த சில தினங்களாக சூரியனில் அதிகளவு கரும்புள்ளிகள் தோன்றி வருவதால் இனிவரக்கூடிய தினங்களில் இதனுடைய வீரியம் அதிகரித்து சூரியகாந்த புயலாக உருவெடுத்து பூமிக்கு வரும் வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். ஆகவே சூரியனை இனி வரும் நாட்களில் அதிகளவு கண்காணிக்க மையத்தில் முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *