

ஓணம் பண்டிகை மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, இன்று தஞ்சாவூரில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர் விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ராயக்கோட்டை,சேலம் தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து தினமும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதேபோல் தஞ்சை மார்க்கெட்டிலிருந்துபட்டுக்கோட்டை, மன்னார்குடி, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, அம்மாப்பேட்டை, நீடாமங்கலம்,உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சையில் ஆவனி மாதத்திலிருந்து பூக்களின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டநிலையில் ஓணம் பண்டிகை மற்றும் வரலட்சுமி விரதம் தினத்தையொட்டி மேற்கண்ட திண்டுக்கல், ஓசூர், ராயக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களுக்கு பூக்கள் அதிகவிலைக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் தஞ்சையில் பூக்களின் விலை ஏற்கனவே இருந்த விலையிலிருந்து ஒரு மடங்கு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் அரளிப்பூ, ஆப்பிள் ரோஸ், கிலோ 200-க்கும், கனகாம்பரம் கி.350-க்கும்,மல்லி-கி.400-க்கும், முல்லை கி.350-க்கும், தாழம்பூ,300-க்கும் செவ்வந்தி கி.150-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பன்னீர் ரோஸ்,சம்பங்கி பூ,கோழிக் கொண்டை,சென்டி, உள்ளிட்ட பூக்கள் மட்டுமே கி.100மற்றும் அதற்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
அதிக விலையில் விற்பனை செய்யப்படும் பூக்களின் விலை ஒரு வாரத்தில் கணிசமாக குறையும் எனவும் பூக்களின் விலை உயர்வால் பொது மக்களை விட வியாபாரிகளே அதிக அளவில் வாங்கி செல்கின்றனர் எனவும் தஞ்சை பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
