
கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக விருதுநகர் சந்தையில் பருப்பு விலை கணிசமான உயர்த்துள்ளது….
இந்திய அளவில் பருப்பு வியாபாரத்தில் சிறந்து விளங்கும் வணிக தளமான விருதுநகர் பருப்பு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் விளையும் துவரை, உளுந்து, பாசிப்பயிறு உள்ளிட்ட பருப்பு வகைகள் நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்படும் பருப்புகள் பருப்பு ஆலைகளில் உடைத்து தயார் செய்யப்பட்டு பின்னர் இந்தியா முழுவதும் மொத்த விலையில் பருப்பு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மஹாராஷ்டிரா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பருப்பு வரத்து குறைந்துள்ளதால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மொத்த விற்பனையில் 95 முதல் 110 ரூபாயாக இருந்த உளுந்தம் பருப்பின் விலை 10 ரூபாய் விலை அதிகரித்து 105 ரூபாய் முதல் 120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
85 முதல் 95 ரூபாயாக இருந்த பாசி பருப்பின் விலை 10 ரூபாய் விலை அதிகரித்து 95 ரூபாய் முதல் 105 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.110 முதல் 125 ரூபாயாக இருந்த துவரம் பருப்பின் விலை 15 ரூபாய் விலை அதிகரித்து 120 ரூபாய் முதல் 135 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.58 ரூபாய் முதல் 68 ரூபாயாக இருந்த கடலை பருப்பின் விலை 7 ரூபாய் விலை அதிகரித்து ரூபாய் முதல் 75 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 70 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த பட்டாணி பருப்பு 80 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.