கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு சொந்தமான 3 கடைகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை களைகட்டி வருவதால் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள பிரபலமான வர்த்தக நிறுவனங்களில் ஜவுளி எடுக்க கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் செம்மங்குடி சாலையில் உள்ள சுப்புலட்சுமி சில்க்ஸ் என்ற வடநாட்டு ஜவுளி நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான மூன்று கடைகளில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் இன்று 3 குழுக்களாக பிரிந்து மூன்று ஜவுளி கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கடைகளில் கதவுகள் பாதி மூடப்பட்ட நிலையில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் முழுமையான சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.