

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் படகு சவாரி இல்லத்தில் கொரோனா தளர்வுகளை தொடர்ந்து இன்று முதல் படகுசவாரியை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், கொரோனா தொற்று பரவல் தற்போது குறைந்ததற்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இன்று முதல் மொடச்சூர் படகு சவாரி இல்லத்தில் படகு சவாரி தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா தளமாக விளங்கி வரும் கொடிவேரி அணையில் குளிக்க தற்போது நீர் அதிக அளவில் செல்வதால் குளிக்க முடியாது. பண்டிகை காலம் நெருங்குவதால் பொதுமக்கள் குழந்தைகளுடன் பண்டிகை விடுமுறை நாட்களில் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் படகு சவாரி இல்லத்தில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் மீண்டும் சசிகலாவை இணைப்பது குறித்து தலைமை கழக செயற்குழு தான் முடிவு செய்யும் என்ற ஓபிஎஸ் கருத்து குறித்து கேட்டபோது….
அது குறித்து நான் கூற தயாராக இல்லை என செங்கோட்டையன் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
