• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

எடப்பாடியில் தீயணைப்புத் துறையினரால் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

எடப்பாடியில் தீயணைப்பு மீட்புப் பணி துறையினரால், தீ பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்க எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் எடப்பாடி பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

அதில் தீ விபத்து இல்லாமல் தீபாவளியைக் இனிதே கொண்டாடுவோம், ஸ்டவ் அடுப்பு எரியும் போது மண்ணெண்ணைய் ஊற்றாதீர்கள், விழா காலங்களில் பட்டாசு மற்றும் வெடிபொருட்களை மிகுந்த பாதுகாப்புடன் பயன்படுத்துங்கள், குடிசை வீட்டின் அருகில் ராக்கெட் போன்ற பட்டாசுகளை வைக்கக் கூடாது, பேருந்தில் பயணம் செய்யும்போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சேமித்து வைக்காதீர்கள் என்ற பல்வேறு விதிமுறைகளை தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.