கடந்த 12 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் பல்வேறு சிறப்பான பணிகளை செய்து வந்திருக்கிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்று வருகின்றன என்கிற ஆய்வை கருப்பு முருகானந்தம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்களுடன் வந்து ஆய்வு மேற்கொண்டோம்.

இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் 18 கோடி ரூபாய் செலவில் பொதுமக்கள் தங்கி இருக்கும் இடத்திற்கான செட் போட்டு வருகிறார்கள். 150 கோடி ரூபாய்த் திட்டத்தில் தண்ணீர் குறித்த திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது குறித்து மூத்த தலைவர்களில் ஒருவரான கருப்பு முருகானந்தம் கூறுவார் என்று அரவிந்த் மேனன் கூறினார்.
அவரைத் தொடர்ந்து கருப்பு முருகானந்தம் கூறுகையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் தங்குவதற்காக சிலர் குடை அமைப்பதாக இருக்கட்டும் குடிநீர் திட்டங்களுக்காக இருக்கட்டும் 18 கோடி ரூபாய் பாஜகவில் மோடி அரசு வழங்கி இருக்கிறது.
அந்தப் பணிகளை பார்வையிட்டு அதற்கான ஆலோசனைகள் வழங்குவதற்காக மேலிடப் பார்வையாளர் இங்கு வந்திருக்கிறார்.
அது மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக மட்டும் 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் ராமச்சந்திரன் புதுக்கோட்டை மாநகருக்குள் இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி முடிவெடுப்பதற்காக இங்கு வந்திருக்கிறோம். இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் அரசாங்கம் செய்யாத பணிகளை கடந்த 12 ஆண்டுகளில் பாஜகவின் மோடி அரசாங்கம் செய்திருக்கிறது. தமிழ்நாட்டுக்காக 12 லட்சம் கோடி நிதி ஒதுக்கி இருக்கிறோம். சாலைப் பணிகள் விமான நிலையப் பணிகள் உட்பட பல்வேறு பணிகளையும் எங்களது பொறுப்பாளர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றி பார்த்து ஆய்வு செய்து வருகிறார்கள் என்றார்.

மீண்டும் அரவிந்த் மேனன் கூறுகையில்
தமிழ்நாட்டில் உள்ள அரசாங்கத்தால் மின்வெட்டு முதல் பல்வேறு பிரச்சனைகள் குழப்பங்கள் இருக்கின்றன. அவற்றை தீர்ப்பதற்கு போதுமான அனுபவம் உள்ளவர்கள் தமிழக அரசியல் கிடையாது. எந்த இடத்தில் எல்லாம் பிரச்சனை வருகிறதோ அந்த இடத்தில் எல்லாம் நாங்கள் மக்களுடன் தொடர்பில் இருப்பதால் எங்களது ரியாக்சன் அந்த இடங்களில் இருக்கும். மக்கள் பிரச்சினைகளை நாங்கள் கையில் எடுத்துக் கொள்வோம். கடந்த 12 ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மோடி அரசு தீர்வு கண்டிருக்கிறது.
மத்திய அரசு செய்யும் திட்டங்களை மாநில அரசு தாங்கள் செய்ததாக வெளியில் சொல்லிக் கொண்டிருக்கிறது. மோடியின் மனதில் தமிழ்நாடு இருக்கிறது என்றார். அப்போது அவருடன் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்களும் வந்து கலந்து கொண்டனர்.



