

மதுரை மாவட்டம் அனுப்பானடி மாநகராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 95லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்கள்,

மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன்,மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார், முகேஷ் ஷர்மா மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் வட்ட செயலாளர் தாமோதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


