
மதுரை மாவட்டம் மாநகராட்சி வண்டியூர் கண்மாய் ( மேற்கு மற்றும் வடக்கு பகுதி) அழகுபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜையில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன்,மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா ,மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன்,மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார்,மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வாசுகி சசிகுமார்,முகேஷ் ஷர்மா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

