

முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விக்கிரமங்கலம் அருகே முதலைகுளம் ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் முதலைக்குளம் கீழப்பட்டி கொசவபட்டி எழுவம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்தப் பரிசோதனை சர்க்கரை அளவு உயர் ரத்த அழுத்த அளவு இஜிசி போன்ற பரிசோதனைகளை செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு பரிசோதனைக்கு தகுந்தவாறு மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது இந்த மருத்துவ முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


