மதுரையில் மத்திய அரசின் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது
மதுரை பொன்மேனி பகுதியில் மத்திய அரசின் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தினை நிர்வாகஇயக்குநர் திரு.கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ்சேகர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபர்கள் அக்ரினி சீத்தாராம்மன் பாளையங்கோட்டை சித்த மருத்துவமனை ஓய்வுபெற்ற முதல்வர் திருத்தணி ,ஜெர்மானூஸ் விடுதியின் உரிமையாளர் ஜோசப்ரத்தினசாமி, மற்றும் ஜெ.ஆர்.சுரேஷ்,எள்ளாளன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்த மருத்துவமனையில் ஆயுர்வேதா,யோகா, நேச்சுரோபதி,சித்தா மற்றும் ஹோமியோபதி முறைகளில் சிறந்த மருத்துவர்களை கொண்டு குறைந்த விலையில் மருத்துவம் அளிக்கப்படும் என்று அமுதம் கூட்டுறவு ஆயுஸ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் நிர்வாகஇயக்குநர் திரு.கிருஷ்ணன்(A Unit of SIMCO) தெரிவித்தார்