

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜகோபாலன் பட்டி ஊராட்சி தனியார் மண்டபத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பகுதி 2 மற்றும் பிற துறைகளை சார்ந்த பணிகளை ஒன்றிணைந்து துவக்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார் .மாவட்ட கவுன்சிலர் ஜி கே பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலகிருஷ்ணன் முகாம் குறித்து விளக்கி பேசினார். முகாமில் மாற்றுத்திறனாளிகள் துறை ,பொது மருத்துவம், வருவாய்த்துறை ,சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை உள்ளிட்ட பிற துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த நலத்திட்டங்களை எடுத்து கூறினார்கள். பயனாளிகள் பட்டா மாறுதல், முதியோர் பென்ஷன், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மனு உள்ளிட்டவைகளை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினரிடம் வழங்கினார்கள் .நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராஜகோபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேல்மணி பாண்டியன், துணைத் தலைவர் மீரா கார்த்திகேயன் மற்றும் ஊராட்சி செயலர் தயாளன் உள்பட அலுவலர்கள் செய்திருந்தனர்.
