• Wed. Sep 11th, 2024

துரை வைகோவுக்கு பதவி, வாரிசு அரசியல் இல்லை – வைகோ…

Byமதி

Oct 21, 2021

வாரிசு அரசியலுக்கு எதிராகத்தான் வைகோ தனி அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஆனால், இப்போது வைகோவின் மகன் வைகோ வையாபுரி வைகோவின் அரசியல் வாரிசாக மதிமுகவுக்குள் வந்திருக்கிறார்.

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை எம்.பி-யுமான வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தனது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை” என்று கூறினார். இந்த நிலையில், அவரது மகனுக்கு பதவி வழங்கப்பட்டது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரிக்கு அக்கட்சியில் பதவி வழங்குவது தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பின் முடிவில், துரை வையாபுரிக்கு கட்சியில் பதவி வழங்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ கூறுகையில், “ மதிமுகவில் துரை வைகோவுக்கு தலைமைக்கழக செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தி துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. பதிவான 106 வாக்குகளில் துரை வைகோவுக்கு ஆதரவாக 104 வாக்குகள் பதிவானது.

மதிமுகவில் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது வாரிசு அரசியல் இல்லை. தொண்டர்கள் விருப்பப்படியே துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளரை பொதுக்குழு தான் தேர்வு செய்யும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *