
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பிரண்ட்ஸ்பார் எவர் கிரிக்கெட் கிளப் மற்றும் எல்.ஜி.காய்ஸ் இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தாய்பள்ளி மைதானத்தில் நடந்தது.
இந்த விளையாட்டு போட்டியின் பரிசளிப்பு விழாவிற்கு அ.தி.மு.க.பேரூர் செயலாளர், கவுன்சிலர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கி, பரிசுகள் வழங்கினார். ஊராட்சி
மன்றத் தலைவர் பவுன்முருகன், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி வட்டாரத்தலைவர் பாலசரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரிகெட் கிளப் செயலாளர் எல்.பிரகாஷ் வரவேற்றார்.
இந்த போட்டியில், முதல்பரிசு மேலமங்கலம் ஸ்பார்டன்கிரிக்கெட்கிளப் அணிக்கு டாக்டர் அசோக்குமார் சார்பாக ரொக்கபணம் ரூ.30 ஆயிரமும், எம்.எஸ்.எம்.ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக, கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு பிரண்ட்ஸ் பார்எவர் கிரிக்கெட் கிளப் பிற்கு, பவுன்முருகன் சார்பாக ரொக்கபணம் ரூ.20ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசு வாடிப்பட்டி கே.டி.சி.சிஅணிக்கு தனலெட்சுமி சார்பாக ரொக்கபணம் ரூ.10ஆயிரம், கோப்பையும் வழங்கப்பட்டது. நான்காம் பரிசு விருவீடு வசந்த் கிரிக்கெட்கிளபிற்கு ஆசிரியர் ஜெயக்குமார் சார்பாக ரொக்கபணம் ரூ.5ஆயிரமும் கோப்பையும் வழங்கப்பட்டது. தொடர் ஆட்டநாயகன் விருதினை சரவணன், வெங்கடேஷ் ஆகியோர் பெற்றனர். சிறப்பு பரிசு பிரண்ட்ஸ்பார்
எவர்கிளப்பிற்கு கவுன்சிலர் கீதாசரவணன் சார்பாக ரொக்கபணம் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. முடிவில், கிரிகெட் கிளப்தலைவர் சுபாஸ் நன்றி கூறினார்.
