
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. மதுரை மாவட்ட வாடிப்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பின்னர் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தலைவராக வழக்கறிஞர் முத்துமணி, துணைத் தலைவர்களாக கார்த்திகேயன், முத்துப்பாண்டி, செயலாளராக பாலகிருஷ்ணன் துணைச் செயலாளர் களாக சிவராம், காசிநாதன், பொருளாளராக அழகர்சாமி நூலகர் துரைமுருகன் செயற்குழு உறுப்பினராக ராமன் கார்த்திக் குமார் நேதாஜி வீரமாரி பாண்டியன் நாச்சியார் கோபி பதவி ஏற்று கொண்டனர். தேர்தல் அதிகாரிகளாக சக்தி சௌந்தரபாண்டியன் தயாநிதி குரு ஆகியோர் இருந்தனர் பதவியேற்ற புதிய நிர்வாகிகளுக்கு மாலை சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. செந்தூர்பாண்டி நன்றி கூறினார்.
