

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து பொன்மேனி பகுதியில் உள்ள பணிமனைக்கு மதுரை மாநகர அரசு பேருந்து இன்று மாலை சென்று கொண்டிருந்தபோது, இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் வாரச்சந்தை இயங்கி வந்ததால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து அரசு பேருந்து இட நெருக்கடியின் காரணமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்திற்கு உள்ளானது. இதனால் பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்ததோடு பேருந்து ஓட்டுனரின் கைகளில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் பேருந்து போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அப்புறப்படுத்தி தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்திலே அருகிலேயே மூன்று பணிமனைகள் இருந்தும் தடுப்பு சுவரில் மோதிய பேருந்து அகற்றுவதற்கு சுமார் 2 மணி நேரம் வரை எந்த ஒரு மீட்பு வாகனமும் வரவில்லை. குறிப்பாக சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலேயே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
