• Thu. Apr 25th, 2024

நீலகிரியில் வாகனங்களுக்கு வழி விட மறுக்கும் யானைகளால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மலைபதையில் யானைகள் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள்,பேருந்துகளை வழிமறித்து சிறைபிடித்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை செல்லும் சாலையான மூன்றாவது மாற்றுப் பாதையாக இயங்கிக் வரும் மஞ்சூர் கோவை சாலையில் 43 கொண்ட ஊசி வளைவுகளைக் கொண்டு அடர்ந்த வனப் பகுதியாக காணப்படுகிறது.கெத்தை பில்லூர் முள்ளி மேல்முள்ளி வெள்ளியங்காடு வழியாக கோவை சென்றடைகின்றன கோவையில் இருந்து மஞ்சூர்ருக்கு தினம்தோறும் மூன்று பேருந்துகள் காலை மாலை இரவு இயக்கப்பட்டு வருகின்றன.சுற்றுலா பயணிகள் முள்ளி வழியாக கேரளாவில் இருந்து மஞ்சூர் உதகைக்கு தனியார் வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றன.

தினம்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லக்கூடிய சாலையில் பதினைந்து,பதினாறாவது கொண்டை ஊசி வளைவு முதல் கெத்தை வரை யானை கூட்டம் இரண்டு குட்டிகளுடன் உணவு தேடி சாலைகளில் தஞ்சம் அடைகின்றன. வாகனங்களுக்கு வழி விட மறுக்கும் யானைகளால் நீண்ட நேரம் காத்துக் கிடந்து செல்ல வேண்டி உள்ளது,இதனால் பேருந்துகள் தனியார் வாகனங்கள் தாமதமாக செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றன. இதனால் பயணிகளும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. வனத்துறை நடவடிக்கை எடுத்து சாலையில் தஞ்சம் புகுந்துள்ள யானைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *