

பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் சுலோச்சனா தலைமையில் மதுரை டி.வி.எஸ். நகர் பூங்காவில்
சிறப்புடன் நடைபெற்றது. மேலும், விழாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சார்ந்த சுமார் 50 மாணவிகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்களும், கல்வி உபகரணங்களும், இரண்டு மாணவிகளுக்கு கல்வி நிதி உதவிகளும் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஜெயபாண்டி, (மதுரை மாவட்ட திட்ட மேலாளர்) மோகனசுந்தரம், மூவேந்தரன் விஜயகுமார் அழகப்பன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொருளாதாரப் பிரிவு டிரஸ்டி அர்ச்சனா நன்றி கூறினார்.
