மதுரையில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இலவச நீர்மோர் பந்தல் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவுக்கிணங்க மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்காக இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது..
மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞா அணி தலைவர் அய்யப்பராஜா தலைமை தாங்கினார்.. வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் அருண் தமிழரசன், அமிழ்தன், நிரஞ்சன், ஜெயதேவன். லல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் பங்கேற்று இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பானகரம் வழங்கினார்..
விழாவில் ஏராளமான வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்மதுரை மாவட்டத் தலைவர் மகாசுசீந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியது தமிழக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை காக்கும் பொருட்டு நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என கூறினார் அதனால் இன்று மதுரையில் மாவட்ட நீதிமன்றம் முன்பு நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் குழுவின் அடித்தட்டு மக்களின் குறைகளை போக்கும் விதமாக இலவச சட்ட உதவி மையம்பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக செயல்படுகிறது நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளாகியும் தமிழகத்தில் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி செய்தாலும் அடித்தட்டு மக்களின் குறைகளை தீர்க்க முன் வரவில்லை இதனை பாரதிய ஜனதா கட்சியினர் போக்கும் விதமாக செயல்படுவாரகள் அதற்க்கான முதல் நிகழ்வாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது என கூறினார்