திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வில்வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நத்தம் அருகே மணக்காட்டூர் பகுதியில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த வில்வீரன் நடுகல்லை கண்டுபிடித்தனர். இந்த நடுகல், இப்பகுதி மக்களால் அப்புச்சி என்று அழைக்கப்படுகிறது. பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நிர்வாக வசதிக்காக தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை பல சிறுநாடுகளாக பிரித்தனர். அதன்படி, இந்த பகுதி புறமலை நாட்டு பிரிவை சேர்ந்தது. இங்கு வாழ்ந்த வில்வீரன் ஒருவனின் மரணத்தின் நினைவாக இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்கலாம். இந்த நடுகல் 3.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் வீரன் தனக்கு எதிரே நேராக பார்த்தவாறு புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதில், வீரனின் முகம் தேய்ந்த நிலையில் உள்ளது.