கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அனைகளில் திறக்கபட்டு உள்ள உபரி நீர் காரணமாக ஆறுகளில் தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரு வெள்ளம் மற்றும் மழையால் 13 வீடுகள் இடிந்து உள்ளன இதன் மூலம் மாவட்டம் முழுவதும் தற்போது பெய்து வரும் மழைக்கு இடிந்த வீடுகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்படி, தென் கிழக்கு வங்க கடல் முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் கூறபட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் கன மழையும் மற்ற இடங்களில் பரவலான மழையும் பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிபாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட முக்கிய அனைகளில் திறக்கபட்டு உள்ள உபரி நீர் காரணமாக ஆறுகளில் தொடர்ந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெரு வெள்ளம் மற்றும் மழையால் 13 வீடுகள் இடிந்து உள்ளன. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் தற்போது பெய்து வரும் மழைக்கு இடிந்த வீடுகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்து உள்ளது.