தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே 100 க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் அகரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி துணைத்தலைவர் முப்புடாதி சங்கர், முத்துபாண்டி, முப்புடாதி, வெள்ளைசாமி, கருப்பசாமி, கண்ணன், அர்ச்சுனன், கருப்பசாமி, பாக்கியம், மாரியப்பன், முத்து பாஸ்கர், முப்புடாதிசுந்தர், சுடலை முத்து, தவசி கண்ணு, அசோக், வெண்ணிலிங்க புரம் முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன், பால்ராஜ், முருகன், மகேந்திரன், மணிகண்டன், சங்கர குமார், பிரபு கண்ணன், கண்ணன், கோபிராஜா, சிவசுப்பிரமணியன் ஆகியோர் திமுக தென்காசி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஆலடி எழில்வாணன், பேரூர் கழக செயலாளர் நெல்சன், வென்றிலிங்கபுரம் கவுன்சிலர் பால் துரை, முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஜோசப் கீழப்பாவூர் பேரூர் பொருளாளர் பொன் செல்வம், அய்யம்பெருமாள், கடையும் ஒன்றிய துணைச் சேர்மன் மகேஷ் மாயவன் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தினேஷ் பாண்டியன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ் வழக்கறிஞர் ஆலடி மானா,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் சரஸ்வதி, அன்பழகன் பொன் மோகன்ராஜ், மணிகண்டன், மாணவரணி மாரியப்பன் அசோக் ,கணேஷ் பாண்டியன் மணிமாறன் அருமைநாயகம் ஜெயராஜ் சாலமோன் சுதந்திர ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்