ஆசான் எப்படியோ அப்படியே பள்ளியும் என்பது ஒரு பழமொழி கல்வித்துறையில் ஆரா மிக, பழமொழியின் உண்மையும் உறுதிப்படுத்திக் கொண்டே வருகின்றது. அழகான கட்டணங்கள், தாராளமான ஆய்வக வசதிகள்,அளவற்ற கற்பிக்கும் சாதனங்கள்,பெரிய நூலகங்கள் – ஒரு பள்ளிக்ககு வாய்திருப்பினும் அது சிறந்த பள்ளி என்று சொல்வதற்கு இல்லை. “ஆளைக் கண்டு ஊதுகாமாலை” என்று சொல்வது போல அவை யாவும் தோற்றமே, வெறும் வெளிப்பகட்டே இவற்றை உயிர் நாடி போல் இருப்பவர்கள் ஆசிரியர்களே. ஆளுமை பண்புகள் பெற்ற உற்சாகமுள்ள அங்கு இல்லாவிடில்,அனைத்தும் வீணே,அவை விலுக்கிரைத்த நீராகவே முடியும்.
தாய், தந்தைக்கு பின் முன்று வயதில் இருந்து 30 வயது வரை குழந்தை பருவத்தில் லிருந்து பள்ளி மாணவர், கல்லூரி மாணவர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் வரை சிறந்த மனிதனாக உருவாக்குவது ஆசிரியர் மற்றும் பேராசிரியர் கடமையாக இருக்கிறது. இன்றைக்கு அவர்கள் சமூகத்தில் சாதாரண பதவிகளிலும் மற்றும் உயர் பதவிகளிலும் இருப்பதற்கு முக்கிய காரணம் ஆசிரியர் மற்றும் பேராசிரியர்கள் என்ற உண்மை மறுக்க இயலாது.
கல்வி உளவியல் என்பது ஆசிரியரை பற்றியும், மாணவர்களை பற்றியும் தொடர்ந்தார் போல் மாணவர் மாணவிகளை பற்றி சரியாக அறிந்து கொள்வதோடு தன்னுடைய வளர்க்கும் முறைகளையும் மிக கவனத்துடன் திறனாய்ந்து ஆசிரியர் தொழில் அடங்கியுள்ளது.ஆசிரியரின் பயிற்கும் முறைகளை மாற்றம் செய்ய வேண்டும் என்ற தன்னுடைய குழவிகளுடன் பணியாற்றும் பொழுது தான் கொள்ளும் உறவு முறைகள் தன்னுடைய பிற ஆகியவற்றில் எல்லாம் ஆசிரியரின் தொழில் வளர்ச்சியின் உயிர் நாடி பேசும், பிரதிபலிக்கும் அவர்களின் தனித்தனி நடத்தையும் அவர்கள் ஆசிரியருடனும் தம்மோடு தானும் இடைவினை இயற்றுவதும் வாய்த்துள்ள ஆசிரியரும்,ஒரே மாதிரியான வளைந்து கொடுக்காத நடை முறைகளால் தன் அருட்பணி குன்றியும் மிகவும் மகிழ்ச்சியும் திறனும் அற்ற வகுப்புத் தலைவராகத்தான் திகழ முடியும்.ஆனால், தொழில் பெற்ற ஆசிரியர்கள் தன்னுடைய தேவைகளை அறிந்து அவற்றை நிறைவு செய்து கொள்வதுடன் ,தான் பணியாற்றுகிறாரோ அக்குழந்தைகளின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுடன் முடியும், எனவே ஆசிரியருக்கும் ஆசிரியர் தொழிலுக்கும் இன்றியமையாத ஒரு சில செய்திகளை ஆராய்வோம்.
பிரபல பாகிஸ்தானிய எழுத்தாளர் மறைந்த அஷ்ஃபாக் அகமது தனது புத்தகம் ஒன்றில் எழுதியுள்ளார் …
ஒரு முறை ரோமில் காவல்துறையால் எனக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பணியில் இருந்ததால் சரியான நேரத்தில் அபராதத்தை செலுத்த முடியவில்லை. அதனால் நான் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ஏன் அபராதம் கட்டவில்லை என்று நீதிபதி கேட்டபோது, “நான் ஒரு பேராசிரியர், எனக்கு நேரமில்லாததால் நான் அபராதத்தை செலுத்த இயலவில்லை மிகவும் பிஸியாக இருக்கிறேன்” என்றேன். தனது உரையின் முடிவில் நீதிபதி கூறினார். ஒரு ஆசிரியர் நீதிமன்றத்தில் நிற்கிறார்…!
உடனே அதற்காக மக்கள் அனைவரும் எழுந்து நின்று என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். எனது அபராதம் ரத்து செய்யப்பட்டது. அப்போதுதான் நாட்டின் வெற்றியின் ரகசியத்தை உணர்ந்தேன். விஐபிக்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்? அமெரிக்காவில், இரண்டு வகையான மக்கள் மட்டுமே உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். விஞ்ஞானிகள் மற்றும் ஆசிரியர்கள்.
பிரான்சின் நீதிமன்றங்களில் ஆசிரியர்களும், பேராசிரியர்களும் மட்டுமே நாற்காலியில் அமர உரிமை உண்டு. ஜப்பானில், அரசாங்கத்திடம் அனுமதி பெற்றால் மட்டுமே ஆசிரியரை கைது செய்ய முடியும். கொரியாவில் ஒவ்வொரு ஆசிரியரும், அவர் தனது அடையாள அட்டையை காண்பிப்பதன் மூலம் அமைச்சர் பெறும் அனைத்து உரிமைகளும் கிடைக்கும். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில், முதன்மை ஆசிரியர் அதிக சம்பளம் பெறுகிறார். ஏனென்றால் அவர்கள் எதிர்கால சமூகத்தை வடிவமைப்பவர்கள். ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் அவமதிக்கும் சமூகத்தில் திருடர்களும் ஊழல்வாதிகளும் தான் உருவாகிறார்கள்.