• Sat. Mar 25th, 2023

அற்புதம் அருளும் அகத்தியர் மலை…

ByAlaguraja Palanichamy

Jul 15, 2022

அகத்தியர் மலையில் நேற்று சிறப்பான பெளர்ணமி நாள். நான் அங்கு சென்று குளித்துவிட்டு அகத்தியர் வழிபட 250 படிகள் நடந்து சென்றேன். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குடமுழுக்கு நடைப்பெற்று உள்ளது. அகத்தியர் கோயிலில் மிகப் பெரிய வற்றாத நீர் விழ்ச்சி சிவனுக்கு தினம்தோறும் லட்சக்கனக்கான நீர் அபிஷேகம் இயற்கையாகவே தருகிறது. சிவனுக்கு அதிசயம் என்னவென்றால் கடல் போல காட்சி அளிக்கிறது. இப்படி ஒரு இயற்கையாக உருவான இந்த நீர் வீழ்ச்சி எங்கு இருந்து உருவாகிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்த்தில் பாபநாசம் அருகில் உள்ளது அகத்தியர் மற்றும் பொதிகை மலை மிகவும் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த பெளர்ணமியில் என்னை சிவன் தானாக வரவைத்தார் இத்திரு தலத்திற்கு அழைத்து சென்று காட்சி கொடுத்தார். எனக்கு பெளர்ணமி அன்று அகத்தியர் மலையில் உள்ள சிவன் சன்னிதானத்தில் பரிவட்டம் கட்டி,மாலை அணிவித்து ஆசி வழங்கினர்,அருள்மிகு கோடிஸ்வரர்லிங்கம் ஆலயத்தில் சென்ற போது எனக்கு கிடைத்த பல்வேறு தகவல்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் அவற்றில் சிலவற்றை தொகுத்து வழங்கி உள்ளேன்.

அகத்தியர் வாழ்ந்து வரும் தென்றல் தவழ்ந்து ஓடும் பொதிகை மழையே அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர். தமிழ் இலக்கணம் சித்த மருத்துவம் ஜோதிடம் ஆகியவற்றை படைத்து சித்தர்கள் எல்லாம் தலையாய் சித்தரால் வழங்கும் தமிழ் முனிவர் அகத்தியரே இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர். அகத்தியர் வாழும் இப் பொதிகை மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6132 அடி உயரத்தில் உள்ள அகத்தியரை தரிசிக்க செல்வதை புனித பயணம் என்று சாகச பயணம் என்றும் கூறலாம்.

அபூர்வ மூலிகைகள் மனதைக் கவரும் அருவிகள் சிற்றுடைகள் ஆறுகள் எங்கு காணினும் இயற்கையின் உடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள் புல்வெளிகள் ஆகியவற்றை தன்னகத்தை கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை. இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய் ,பாம்பு, உடும்பு, மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன பரப்பன உள்ளிட்ட அனைத்து மணவாழ் உயிரினங்கள் உள்ளன. தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரள தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி நகரில் உள்ள வனவிலங்கு காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று அவர்களது தகவலின் பெயரில் போன காட்டில் உள்ள வனத்துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்று அங்கிருந்து வாகன மூலம் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு சென்று போணக்காடு பிக்கெட் ஸ்டேஷன் என்ற இடத்திலிருந்து வனத்துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

முதல் அரை மணி நேர பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயில் அவரை வணங்கி நடை பயணம் தொடங்குகிறது அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமணையாறு அடைகிறோம் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது இவ்வாறு மழை ஏற்றம், இறக்கம், சிற்றூறு, அருவிகள், புல்வெளிகள், அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து சுமார் ஆறு மணி நேரம் பயணத்தில் நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம் அதிர்மலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம். அங்கு கேரளா வனத்துறையினர் பக்தர்கள் தங்குவதற்காக கட்டியுள்ள அதர்மலை கேம்ப் செட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம் குரு முனிவரின் வழிபாட்டுக் கொண்டு செல்லும். பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு அதர்மலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை வணங்கி விட்டு நடை பயணம் தொடங்குகிறது. சுமார் ஒரு மணி நேரம் நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம் அங்கு சிறிது நேரம் ஓய்வு அங்குள்ள தென்பொதிகை மானசரோவாரில் சிறு குளியலை முடித்துவிட்டு இது முற்றிலும் மூலிகை நீரை கொண்டது மீண்டும் நடைப்பயணம் 17 நிமிடம் நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர் கேரளத்தினர் இப்பகுதியை பொங்காலை பாறை என்று கூறுகின்றனர்.

கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப் பாறை என்றழைக்கப்படுகிறது. இச்சங்கு முத்திரை பகுதிகள் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம் பொருனை என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தி இடமான பூங்குளம் துணை உள்ளது இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்து தான் பொதிகை மலையை நோக்கி மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. சிகரத்தின் பாதிப்பு இடதுபுறத்தின் மரங்கள் நிறைந்த மழை நீர் வலியும் சாய்வான பகுதி வழியே ஏறிச்சென்று பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தை பொருள்படுத்தாதது காலும் கையும் ஊன்றி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நாக்கு வறண்டு பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்பு கயிறு ரோப் பிடித்து கவனத்துடன் ஏறி சென்றால் கடல் மட்டத்திலிருந்து சுமார் 6,132 உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம். அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறுமலையில் குரு முனிவர் அகத்தியரின் ஏகானந்த சிலையே தரிசிக்கும் போது அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து இந்த தரிசனத்திற்காக நாம் பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும் இப்படி ஆனந்த அனுபவத்துடன் கொண்டு சென்ற பூஜை பொருட்களால் குரு முனிவருக்கு அபிஷேக ஆராதனை செய்துவிட்டு வழிபாடு நடைபெறும். தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி மூன்று மணி நேரம் பயணத்தில் மீண்டும் அதர்மலை கேம் செட்டை அடைந்து அங்கு உணவு அருந்திவிட்டு சிறிது நேரம் ஓய்வுக்கு பின் இரவு 7 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு மூன்றாம் நாள் காலையில் அதிர்மலை காவல் தெய்வத்தையும் புதிய சிகரத்தையும் வழங்கிவிட்டு பயணம் தொடங்கி சுமார் 5 மணி நேரம் நடை பயணத்துக்கு பின் போனக்காடு பிக்கட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.

மூன்று நாள் பயணத்தின் போது சுத்தமான காற்று மூலிகை கலந்து நீர் செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலக தொடர்பின்மை பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதை கவரும் பசுமை வழி ஆகியவற்றால் நமது உடலும் உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகாது. தமிழ் முனிவரை தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்துவர்கள் தினமும் குழுவாக நாள் ஒன்று சுமார் 10 பேர் சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றன 1998 ஆம் ஆண்டு தமிழக வனத்துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக்கு குழுவினர் மற்றும் பக்தர்கள் முயற்சியால் வனத்துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999 ஆம் ஆண்டில் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில் 2009இல் தமிழக வனத்துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மருத்துவத்துடன் கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது. பொதிகை மலை அடிவாரமாக திகழும் பாபநாசம் காரையார் டேம் அகத்தியர் அறிவு இங்கிருந்துதான் முன்பு அகத்தியர் மலை உச்சிக்கு சென்று வந்தனர். தமிழ் வளர்ந்ததும் தென்றல் பிறப்பதும் சந்தன பொதிகையில் ஆகும் துண்டு தொட்டு தமிழோடு இணைத்து பேசப்படும் மழை பொதிகை மலை ஆகும். இம்மலையின் சிறப்பினை சங்க கால முதல் இன்று வரை தோன்றிய இலக்கியங்கள் அனைத்தும் குறிப்பிடுகின்றன. மதுரை காஞ்சி பரிபாடல் குறுந்தொகை அகநானூறு புறநானூறு சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற இலக்கியங்களிலும் பெரிய புராணம் கந்தபுராணம் திருவிளையாடல் புராணம் ராமாயணம், பாரதம் போன்ற புராண இதிகாச இலக்கியங்களிலும் மூவர் தேவாரம் திருவாசகம் முதலிய திருமுறைகளிலும் திருப்புகழ் போன்ற அறுப்பாடல்களிலும் பொதிகை சிறப்பித்து கூறப்பட்டுள்ளது. தென்பொதிகையில் தான் தனிப்பொருளை பிறக்கிறது .

பொதிகையில் தமிழ் பிறந்தது என்று வில்லிபாரதம் கூறுகிறது…

“பொருப்பிலேப்பினர் பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து இருப்பில் இருந்து வையை ஏட்டிலே தவழ்ந்து பேதை நெருப்பில் நின்று கற்றோர் நினைவிலே நடந்தோர் என மருப்பிலே பயின்ற பாவை மருங்கலே வளர்கின்றாள். “

பெருமை மிக்க பொதிகையில் பிறந்து நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வழியாக 120 கிலோமீட்டர் தூத்துக்குடிக்கு ஓடி வங்கக்கடலில் கலக்கிறது பெருமை என்னும் தாமிரபரணி. தமிழ்நாட்டிலே உற்பத்தியாகி தமிழ்நாட்டுக்குள்ளே ஓடி கடலிலே கடக்கும் ஒரே நதி புருனை மட்டுமே பொதிகை மலைத்தொடரில் பாபநாசம் என்னும் அழகிய சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. பொதிகை மலை காடுகள் அடர்த்தியானவை அழகானவை பல்வேறு விலங்கினங்கள் அங்கே வாழ்கின்றன பாபநாசம் ஊரிலிருந்து மலை மேல் 40 கிலோமீட்டர் தொலைவில் வான தீர்த்தம் என்னும் பான தீர்த்தம் அமைந்துள்ளது. பாபநாச அணை நீர்த்தேக்கத்தில் நீர்த்தேக்கத்தை படகில் கடந்து இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் அங்குள்ள அறிவு 122 அடி உயரத்தில் இருந்து விழுவது இனிமையான காட்சியாகும். அதற்கு கீழே கல்யாண தீர்த்தம் என்னும் அருவி உள்ளது 162 அடி உயரத்திலிருந்து இது விழுகிறது யாரும் குளிக்க இயலாது அறிவித்த தண்ணீர் தேங்கி நிற்கும் குலமே குளிப்பதற்குரிய இடமாகும். அதிலிருந்து கீழே சற்று தூரத்தில் பல கிளைகளாக விழும் அழகான அகத்தியர் அருவி உள்ளது 40 அடி உயரத்திலிருந்து விழும் இந்த அருவியில் மக்கள் விரும்பி குளிக்கிறார்கள். அதற்கு கீழே ஆறு தலையில் இறங்கும் இடத்தில் தலையணை என்று ஒரு அணை கட்டப்பட்டுள்ளது இதன் மேல் வலிந்து விழும் அருவியில் மக்கள் விரும்பி குளிக்கிறார்கள் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறை பகுதி முழுவதும் புலிகளின் சரணாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சரணாலய பகுதியில் திருப்பரங்குடி திருமலை கோவில் பாபநாசம் ஐயப்பன் பிறந்த இடம் சாஸ்தா முதல் கோயில் சொரிமுத்து அய்யனார் கோயில் கோரக்க நாதர் கோயில் அகத்தியர் கோயில் வனப்பேச்சி அம்மன் கோயில் போன்ற வழிபாடு தளங்கள் அமைந்துள்ளன. பல்லாயிரம் ஆண்டுகளாகவே கோயிலுக்கு சென்று சென்றும் இங்குள்ள அருவிகளின் நீராடி மகிழ்ந்தும் வருவது மக்களுக்கு வழக்கமாக உள்ளது அகத்தியர் கோயிலில் அருகே அதிசயம் நிகழும் அற்புதமான அய்யாவின் காட்சி சந்தன மலை சூட்சம், ரூபத்தில் அய்யாவின் காட்சி என்று கிடைப்பது அதனால் பலன் பெறுவது இன்னும் காண முடிகிறது. இங்குள்ள அகத்தியர் கோடிலிங்கேஸ்வரர் உலகம்மை முருகன் கோவிலில் அம்மாவாசை பகலிலும் பௌர்ணமி இரவு அகத்தியருக்கு பௌர்ணமி வழிபாட்டு குழுவால் பூஜைகள் நடைபெறுகிறது அகத்தியர் பக்தர்கள் மாதம் ஆயிரம் கணக்கில் கலந்து கொண்டு வழிபடுவதை காணமுடிகிறது.

இச்சங்கு முத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம் உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் ‘பூங்குளம்’ என்ற சுனை தெரியும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை பயணத்தை தொடர வேண்டும். அங்கு அகத்தியரைப் போலவே குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையை தரிசிக்கும்போது, சிரமப்பட்டு மலை ஏறிவந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்த தரிசனத்துக்குத்தானா இப்பிறவி எடுத்தோம் என்ற பரவச நிலை பக்தர்களுக்கு ஏற்படும்.

ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும். மனம் நிறைந்த ஆனந்த அனுபவத்துடன் அகத்தியருக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபாடு செய்த பின் மீண்டும் பயணம் தொடங்குகிறது. மலை ஏற்றத்தைப் போலவே மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரம் நடந்தால் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம். அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேர ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அன்று இரவும் அங்கேயே தங்கி விட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு சுமார் 5 மணி நேரம் நடந்தால் போனக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பொதிகை மலை பயணம் நிறைவு பெறும்.உயிரினங்களின் வகைகள்.

நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தமிழ்நாட்டில் 76 உள்ளன. ஆனால் பொதிகை மலையில் 120 உள்ளன. 25 வகை மீன், 11 வகை தவளைகளும் பொதிகையில் மட்டுமே காணப்படுகின்றன. 177 வகை ஊர்வனவற்றில் 160 வகைகள் பொதிகை மலையில் மட்டும் உள்ளன. அதிலும் 45 வகை இங்கு மட்டுமே வாழ்கின்றன. கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 270ல் 70க்கு மூலவித்து இங்குள்ளது. நாமறிந்த மீன் வகை 175. ஆனால் பொதிகையில் வசிப்பதோ 230.

நுண்ணுயிர் முதல் மந்தி வரை

புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்தி வரை பொதிகையில் உள்ளன. இந்த பிரபஞ்சத்தில் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பில் விழுந்த சிறு துண்டாகிய பூமி 500 கோடி வருடங்களுக்கு முன் குளிர்ச்சியடைந்து பூமியானது. அதில் 300 கோடி வருடங்களுக்கு முன்பு உயிர்த்தோற்றம் உண்டானது என்கின்றனர் பல அறிஞர்களும் சித்தர்களும் கூறுகின்றன. பூமி குளிர்ந்து ஒருவித வடிவத்துக்கு வந்து உயிர்கள் உருவான காலத்திலேயே பொதிகை மலையும் தோன்றியிருக்கலாம்.

ரகசிய மூலிகைகள்

பசிக்கவே செய்யாத மூலிகை, நீண்ட ஆயுள் தரும் மூலிகைகள் என பல ரகசிய மூலிகைகள் இங்கு ஏராளமாக வளர்ந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளைக் கொண்டுதான் அகஸ்தியர் கடுமையான நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.

மூலிகைகளின் மூல ஸ்தானம்

பொதிகை மலைதான், மூலிகைகளின் மூல ஸ்தானம். மூட்டு வலியை போக்கும் பளிங்கு காய், தாமிரத்தை பஸ்பமாக்கும் கல் தாமரை, விஷம் முறிக்கும் கீரிக்கிழங்கு, சர்க்கரை நோயை போக்கும் பொன்கொரண்டி என பல்வேறு மூலிகைகள் பொதிகையில் உள்ளன. 7 வகை பனைகள், 10 ஆண்டுகளில் காய்த்து, காயில் உள்ள விதையால் கர்ப்பப்பை புற்றை அகற்றும் கல்வாழை, பட்டையால் பாம்பின் நஞ்சை இறக்கும் ஞாறவாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள் இங்கு வளர்கின்றன.

கொழித்துக் கிடக்கும் குலவு, புலவு

உலகில் உள்ள பூக்கும் தாவரங்கள் 5650ல் 2655 வகை இங்கு உள்ளன. 500க்கு மேற்பட்ட மூலிகைகள் இங்கு மட்டுமே வளர்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. பாம்புக்கடி வீரியத்தை போக்கும் மருந்து,சிறுநீர்ப்பை கல்லடைப்பை நீக்கும் மற்றும் சர்க்கரை வேம்பு போன்ற மூலிகைகள் இம்மலையில் கிடைக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *