• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சீனாவில் தொழிற்சாலையில்
தீ விபத்து – 36 பேர் பலி..!

வென்பெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங் நகரில் கைசிண்டா வர்த்தக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள அன்யாங் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். வென்பெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங் நகரில் கைசிண்டா வர்த்தக நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் 2 பேரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீ பரவாமல் தடுத்தனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.