• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

உலக அளவில் கொரோனாவில் இருந்து
குணமடைந்தோர் எண்ணிக்கை
62.25 கோடி ஆக உயர்வு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64.33 கோடி ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 33 லட்சத்து 14 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 62 கோடியே 25 லட்சத்து 14 ஆயிரத்து 437 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 66 லட்சத்து 27 ஆயிரத்து 331 பேர் உயிரிழந்து உள்ளனர்.