• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பேருந்து நிலையத்தில் கடைகளை பொது ஏலம் விடுவதை தற்காலியமாக நிறுத்திவைப்பு..,

ByP.Thangapandi

Oct 14, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பேருந்து நிலையத்தில் உள்ள சுமார் 100 கடைகள் பொது ஏலம் விடுவதற்கு வரும் 26 ந் தேதி நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில்

இன்று உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நகராட்சி ஆணையாளர் சங்கர் கணேஷ் தலைமையில் நகராட்சி துணை சேர்மன் தேன்மொழி முன்னிலையில் மின்னணு முறையில் பொது ஏலத்தில் கலந்து கொள்வது குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற இருந்தது.,

இதில் 20 க்கும் மேற்பட்ட திமுக, அதிமுக உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.,

இந்த நிலையில் உசிலம்பட்டி பேருந்து நிலையம் 2023-ம் ஆண்டு சுமார் 8 கோடி மதிப்பீட்டில் தொடங்கி கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் சுமார் 100 வணிக வளாக கடைகளும் உள்ளன.,

இந்த நிலையில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் கட்டுமான பணிகள் மந்தமாக நடைபெற்று வரும் நிலையில் பேருந்து நிலையம் பணிகள் முழுமை பெறாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.,

இந்தக் கட்டுமானப் பணிகள் முழுமை பெறாமல் பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

இதில் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பை ஏற்படுத்தியது.,

தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சங்கர் கணேஷ் பயிற்சி வகுப்பு நிறைவடையாமல் வரும் 26 ஆம் தேதி நடைபெற இருந்த பொது ஏலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார்.,

இதனால் இப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.,