• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

போடி அரசு மருத்துவமனையில் பணியில் கவன குறைவாக இருந்த மருத்துவர் சஸ்பெண்ட்.

ByAjmalkhan saleemraja

Oct 14, 2026

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி கள ஆய்வு மேற்கொண்டார்.

போடி அரசு மருத்துவமனை ஆய்வின் போது, பணி நேரத்தில் கவனக் குறைவுடனு இருந்த டாக்டர் பாலமுருகன் மாவட்ட ஆட்சியரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் நிலை தடுமாறி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து டாக்டர் பாலமுருகன் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி அதிரடியாக உத்தரவிட்டார்.

தொடர்ந்து மருத்துவமனையில் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்து கேட்டறிந்தார், மேலும் மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையில் நிரந்திர மற்றும் தற்காலிக பணியாளர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்

தேனி மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி பணியில் சேர்ந்த இரண்டாவது நாளில் கள ஆய்வில் மருத்துவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த நிகழ்வு தேனி மாவட்டத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.