• Fri. Apr 26th, 2024

10 ரூபாய் நாணயம் வாங்க மறுத்தால் சிறை தண்டனை

ByA.Tamilselvan

Sep 22, 2022

கடந்த 2005-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் அறிமுகம் படுத்தியது. அதனை தொடர்ந்து 14 விதமான 10 ரூபாய் நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு வகை 10 ரூபாய் நாணயமும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டவை .பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் எந்த 10 ரூபாய் நாணயங்களையும் மக்கள் வாங்க யோசிக்கத் துவங்கிவிட்டனர். இதற்கெல்லம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி நேரடியாக தலையிட்டு பல்வேறு நடவெடிக்கைகள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டது.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறுவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றமாகும். அதன்படி இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நாணயங்களை வாங்க மறுப்பவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீதும் இந்த சட்டத்தின்படி புகார் அளிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *