
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது – 20 மதுபாட்டில்கள், ரூபாய் 530/- பணம் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருசாமி மற்றும் போலீசார் கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் மகன் தங்க மாரியப்பன் (46) என்பவர் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் தங்க மாரியப்பனை கைது செய்து அவரிடமிருந்த 20 மதுபாட்டில்கள் ரூபாய் 530/- பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
